Saturday, 12 October 2013

ஐயா உனதருள் புரி நீ


ஐயா உனதருள் புரி நீ, 
அருமை மேசையா - ஐயா

          பொய்யா மருள் வினை, செய்யா துலகதில்
          நையா தடிமைகொள், துய்யா, மெய்யா - ஐயா

ஆதா ரமும் நீயலதார் திருப் பாதா
சாதா ரண வேத வினோத சங்கீதா
காதா ர வினவு, நீதா எனின் குறை
தாதா, பர குரு நாதா, போதா - ஐயா

ஈசா, நசராபுரி மேவிய வாசா
பூசா விதி மாமறை புகழும் உபதேசா
மாசா மிகு பவ நாசா, எருசலை
ராசா ஒரு சரு வேசா, நேசா - ஐயா

அந்தா, அனாதி, பிதா ஒரே மைந்தா
சிந்தா குலமே தவிர் நீசு சுகந்தா
உந்தா ப்ரம் அருள் எந்தா, ஞானப்ர
பந்தா, வருசதா னந்தா நந்தா - ஐயா

பரனே திருக்கடைக்கண் பாராயோ


பரனே திருக்கடைக்கண் பாராயோ - எந்தன்
பாவத்துய ரனைத்தும் தீராயோ
பரனே பரனே பரனே பரனே (2)

ஸ்திரமில்லாத எனை முனையாமல் - நான்
செய்த குற்றம் ஒன்றும் நினையாமல் (2)
பரனே பரனே பரனே பரனே (2)

மாய வலையில் பட்டு சிக்காமல் - லோக
வாழ்வில் மயங்கி மனம் புக்காமல் (2)
பரனே பரனே பரனே பரனே (2)

அடியேனுக் கருள்செய் இப்போது - உன(உந்தன்)
தடிமைக் குனையன்றி கதியேது
பரனே பரனே பரனே பரனே (2)

வேதநாயக வானன் பாட்டுகென்றே
மேன்மையான தயவைக் காட்டே (2)
பரனே பரனே பரனே பரனே (2)

அனந்த ஞான சொரூபா, நமா ஓம்


அனந்த ஞான சொரூபா, நமா ஓம்
அனந்த ஞான சொரூபா (2)

கனங் கொள் மகிமையின் கர்த்தாவே
காத்திர நேத்திர பர்த்தாவே - நரர்
காண்க வந்தாரே நமா ஓம், காண்க வந்தாரே (2)
கருணாகர தேவா, தேவா, அனந்த ஞான சொரூபா

துன்பம் துயரம் தீர்த்தாரே
பாவங்கள் சாபங்கள் நீர்த்தாரே (2) - சென்று
பார்க்க வந்தாரே நமா ஓம், பார்க்க வந்தாரே (2)
பரமாதிக்கத் தானே, தானே, அனந்த ஞான சொரூபா

நெல்லை வேதநா யகன் பாட்டார்
நித்திய கீர்த்தனக் கொண்டாட்டார் (2) - அருள்
நீடி வந்தாரே ந்மா ஓம், நீடி வந்தாரே (2)
திரு நேசக்குமாரா, குமாரா, அனந்த கான சொரூபா