Saturday, 12 October 2013

தேவா திருக்கடைக்கண் பார்


தேவா திருக்கடைக்கண் பார் - ஐயா
வினை தீரையா, வினை தீரையா(2) - தேவா
மூவாய் உலகில் வந்த யோவா (2) - சச்சிதானந்தா

பொல்லா உலகம் பகை - அதின்
எல்லா செல்வமும் புகை
பொல்லா உலகம் பகை
வல்லா நின் கிருபை (2)
ஆளுமே தேவா - தேவா

அந்தி சந்தியும் விடாமல்
சந்திரப் பிசாச டாமல்
அந்தி சந்தியும் விடாமல்
எந்த விதமும் கெடாமல் (2)
ஆளுமே தேவா - தேவா

வேத நாயகன் தன்பவா
ஓதிய ஒருமை தேவா
வேத நாயகன் தன்பவா
பாதுகாத் தருள்செய் நித்தியா (2)
நீதி செங்கோலோ - தேவா

0 comments:

Post a Comment