Saturday, 12 October 2013

நம்பிவந்தேன் மேசியா, நான் நம்பிவந்தேனே


நம்பிவந்தேன் மேசியா, நான் நம்பிவந்தேனே- திவ்ய
சரணம் சரணம் சரணம் ஐயா, நம்பிவந்தேனே

தம்பிரான் ஒருவனே, தம்பமே தருவனே - வரு
தவீதுக் குமரகுரு பரமனுவேலே, நம்பிவந்தேனே - நான்

நின்பாத தரிசனம், அன்பான கரிசனம் - நித
நிதசரி தொழுவதிதம் எனவும்உறுதியில், நம்பி வந்தேனே - நான்

நாதனே கிருபைகூர், வேதனே சிறுமைதீர் - அதி
நலம் மிகும் உனதிரு திருவடி அருளே நம்பி வந்தேனே -  நான்

பாவியில் பாவியே, கோவியில் கோவியே - கன
பரிவுடன் அருள்புரி அகல விடாதே, நம்பி வந்தேனே -  நான்

ஆதி ஓலோலமே, பாதுகா காலமே - உன
தடிமைகள் படுதுயர் அவதிகள் மெத்த, நம்பி வந்தேனே -  நான்

0 comments:

Post a Comment