சிந்தனைப் படாதே நெஞ்சமே - உனை
இரட்சிக்க
தேவ சுதன் இருக்கின்றார்
அந்தியும்
சந்தியுமாக யார்
பகை
செய்தாலு மென்ன
எந்த
வினை வந்தும் ரோமம்
எண்ணப்
பட்டி ருக்கையிலே - சிந்தனை
ஐந்து
சிட்டு ரெண்டு காச தாக
விற்றும்
அங்கத்திலே ஒன்றும்
கறையில்
விழாத உத்தமன்
உறைத்
திருக்க
முந்தியில்
விசாரமுடன்
போக்கிட
மற்றவர் போலே
சந்தே
கத்தினால் உழன்று
தவித்து
தவித்துக் கொண்டீர் - சிந்தனை
என்ன
புசிப்போம் குடிப்போம்
என்ன
உடுப்போம் எனவே
பண்ண
விசாரங்கள் கோடி
பண்ணினோம்
எண்ணத் தினாலே
உன்ன
ளவுக்கு அதிக - ஓர்
முழத்தை
யுண்டாக்க நீயார்
கன்னி
வயிற்றில் சமைத்த
ஆண்டவன்
செத்து போனாரோ - சிந்தனை
திக்கெல்லாம்
புகழும் ஏகச்
சக்ராதி
பனுக் கன்பான
தக்கன
தேவ சகாயன்
சற்குணத்
துதித்த சேயன்
முக்கிய வேத நாயகன்
நற்கலை பாதஞ் சொல்வாயுன்
துக்க சஞ்சலங் களோடும்
எக் கருமமும் கை கூடும் - சிந்தனை
0 comments:
Post a Comment