Saturday, 12 October 2013

யாரும் துணையில்லையே


யாரும் துணையில்லையே எனக்
காதியான் திருப் பாலா
ஐந்து காயத்தின் அடைக்கலம் கொடுத்
தாளுவாய் இயேசு நாதா - யாரும்

முந்து மானிடர் தமப்த் தீவினை
முழுவதும் அற வேண்டியே
முள் முடியுடன் குருசில் ஏறிய
முன்னவா க்ருபை குருவையே
          சிந்தும் உம் உதிரத்தில் என்
   வினை தீர்த்து இரட்சியும் ஐயன
   தீய பாவி யெனக்கு வேறொரு
   செயலிடம் துணை யில்லையே - யாரும்

தந்தை தாயரும் மைந்தர் மாதரும்
சகலரும் உதவர்களே
சாகும் நாளதில் நீயல்லால் என்னை
தாங்குவாரும் உண்டுமோ
          சொந்தம் நீ எனக்கன்றி வேறொரு
          சொந்த மானவர் இல்லையே
          சுத்தமும் பொருள் அத்தமும் உள்ள
          பத்தமே எனதத்தனே - யாரும்

கள்ளனாயினும் வெள்ளனாயினும்
பிள்ளை நான் உனக்கல்லவோ
கர்த்தனே வல பக்கம் மேவிய
கள்ளனுக் கருள் செய்தய்யே
          தள்ளியென்னை விடாமல் உம்மடி
          வந்து காத்திடும் அப்பனே
          தயவதாய் ஒரு குருசில் ஏறிய
          சர்வ ஜீவ தயாபரா - யாரும்

0 comments:

Post a Comment