Saturday, 28 September 2013

Why Jesus ? – The Powerful Name ? - A Simple form Explanation


Why  Jesus ? – The  Powerful  Name ?   -  A Simple form Explanation
Immanu – el  = The God with US.
இம்மானுயேல் – தேவன் நம்மோடு.

     ஆதி முதற்கொண்டு இம்மானுயேலின் (இயேசு கிறிஸ்து) பிறப்புக்கு முன்பு வரை, தேவன் தமது மக்களை வழிநடத்தவும், முறைபடுத்தவும், நெறிபடுத்தவும் பலரை எழுப்பினார். உதாரணமாக – மோசே, சாமுயேல், யோசேப்பு, எசேக்கியேல், எழியா, எஸ்றா, யேசாயா, தாவீது, சவுல், etc.  ஆனால், மக்களோ இருந்ததைக் காட்டிலும் இன்னும் கடின மனதுடையவர்களாயும், ஒழுங்கற்று திரிபவர்களாயும் இருந்தனர். நாளுக்கு நாள் பாவம் பெருகியது, பெருக்கெடுத்து நதியாக ஓடியது.

இவைகளினால், தேவன் மிகுந்த கோபம் கோண்டிருந்தாலும், அவர் இரக்கமும் சாந்தகுணமுள்ளவரானபடியினால் அனைத்தையும் அமைதலோடும் சகித்துக் கொண்டிருந்தார். அதை வெளிபடுத்த அவ்வப்போது தமது தீர்க்கதரிகளை எழுப்பி அவர்கள் மூலம் வெளிபடுத்தினார். ஆயினும் மக்கள் அதை ஏற்றுக்கொள்ள மனதில்லாமல் மாறாக புறம்பே தள்ளினர்.

இவைகள் எல்லாவற்றிற்கும் ஒரு முற்று புள்ளி வைக்கவும், மக்கள் பாவத்திலிருந்து விடுபட ஒரு வழியினை உண்டாக்கவும், இருளில் இருக்கும் மக்கள் வெளிச்சத்தை காணவும் தேவன் தன்னுடைய ஒரே மகனான இயேசு கிறிஸ்துவை விண்ணிலிருந்து மண்ணுகு ஒரு சராசரி மனித உருவெடுத்து, உலக மக்களின் பாவத்தை சுமந்து மரிக்கும் படியாக அனுப்பினார்.
                         
Xமோசே, சாமுயேல், சிம்சோன், கிதியோன், சவுல், தாவீது, எலியா,

எசேக்கியேல், ஏசாயா, மீகா, தானியேல் etc
  
இறுதியாக...தேவனால் அனுப்பப்பட்ட இம்மானுயேல்..

    மண்ணில் வந்த தேவ குமாரன் இயேசு கிறிஸ்து தேவ சித்தத்தின்படி உலக மக்களின் பாவங்களை சுமந்து, ரத்தம் சிந்தி, மரித்து , மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து, பரலோகம் சென்று ஜெயமெடுத்தார். இன்று தேவபிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார். (Right Side or as a Right Hand). ஆகையாலே நம்முடைய ஜெபங்கள், விண்ணப்பங்கள் அனைத்தும் இயேசு கிறிஸ்துவின் வழியாக பிதாவினிடத்திற்கு சென்று அதற்குரிய பதில்கள் பரிசுத்த ஆவியானவரின் மூலமாக வந்தடைகிறது.




          
இயேசு ஆற்றல், சக்தி, அதிகாரம்.
JESUS –  Strength, Mighty, Power.
ஆகையாலே,
இயேசு என்ற நாமம்
எல்லா நாமத்திற்கும் மேலான நாமமாகவும்,
வல்லமை வாய்ந்த்தாகவும்,
அதிகாரம் நிறைந்ததாகவும் இருக்கிறது.

0 comments:

Post a Comment