DO NOT ACT IS A PRINCIPAL ACT
OF GOD.
மாயமாலம் செய்யாதே – இதுவே தேவனின்
முதன்மையான சட்டம்.
மாயமாலம் – HYPOCRITE – வெளிவேஷம், கபடமாக நடிப்பது.
Hypocrite
– The Most Powerful
Weapon of Satan.
மாயமாலம்
பற்றி - புதிய ஏற்பாட்டில் 20 முறை குறிப்பிடப் பட்டுள்ளது. அவை அனைத்துமே இயேசு
கிறிஸ்துவின் வாயிலிருந்து புறபட்ட வார்த்தைகளாகும்.
( மத்தேயு 6:2, 6:5, 6:16, 7:5, 15:7, 16:3, 22:18, 23:13, 23:14, 23:15,
23:23, 23:25, 23:27, 23:29, 24:51 , மாற்கு 24:51, 7:7, லூக்கா
6:42, 11:44, 12:56, 13:15 )
1. நாம் அனைவருமே பாவிகள் எனவும்
2. நாம் அனைவருமே பொய்யர்கள் எனவும்
3. நாம் அனைவருமே உலகத்தின் அதிபதியான சாத்தான் எனக்
கூறப்படும் கெட்ட ஆவியின் ஆளுகைக்குள் இருக்கிறோம் எனவும்
நம்முடைய சர்வ வல்ல தேவன் நன்கு அறிந்தே இருக்கிறார்.
ஆகையாலே,
நாம் தேவனைத் தேடி அவரே கதியென சரணடையும் போது, இது நாள் வரை நாம் செய்த சகல
பாவங்களையும், தேவனுக்கு விரோதமான காரியங்களையும் அவர் மன்னித்து, நம்மை
ஏற்றுக்கொண்டு நாம் கெட்ட ஆவியினிலிருந்து விலகும்படிக்கு நல்லாவி தந்து வழிநடத்துகிறார்.
“ கர்த்தர்
வானத்திலிருந்து நோக்கிப் பார்த்து, எல்லா மனுபுத்திரரையும் காண்கிறார் “ என சங்கீதம். 33:13 னிலும் , “ அவர்களுடைய
இருதயங்களையெல்லாம் அவ்ர் உருவாக்கி, அவர்கள் செய்கைகளையெல்லாம்
கவனித்திருக்கிறார் “ சங்கீதம் 33:15 னிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாம்
செய்கின்ற ஒவ்வொரு செயல்களையும், இருதயத்தின் ஒவ்வொரு நினைவுகளையும் தேவன்
கவனித்து இருக்கின்றார்.
நம்
குடும்பம், நாம் இருக்கும் இடம், வேலை ஸ்தலம், ஆலய வழிபாடு, பிறரிடம் காட்டும்
அன்பாகட்டும் – எதுவாயிருந்தாலும் மாயக்காரரைப் போல் நடிக்காமல், உண்மையாய்
இருக்கவே தேவன் விரும்புகிறார். இதுவே தேவனை நோக்கி நாம் பயணிக்க ஒரு பிரதான
தொடக்கம்.
ஆகவே, உண்மையைக்
கேட்போம், தேடுவோம், கண்டடைவோம் – நாம் தெளிவடைந்து பிறருக்கும் அறிவிப்போம்.
The More you ACT
The More you GET
from World
The More you LOOSE
from God
-
Parthasarathi Boaz.

0 comments:
Post a Comment