Saturday, 12 October 2013

வாருமையா போதகரே


வாருமையா போதகரே, வந்தெம்மிடம் தங்கியிரும்
சேருமையா பந்தியினில், சிறியவராம் எங்களிடம்

ஒளி மங்கி இருளாச்சே, உத்தமரே வாருமையா
கழித்திரவு காத்திருப்போம், காதலனே கருணை செய்வீர்

ஆதரையில் எம்மாறுதலே, அன்பருக்கு சதா உறவே
பேதையர்க்குப் பேரறிவே, பாதை மெய்ஜீவ சற்குருவே

நாமிருப்போம் நடுவிலென்றீர்,
நாயன் உன் நாமம் நமஸ்கரிக்க
தாமதமேன் தயை புரிய, தற்பரனே நலந்தருவீர்

உந்தன் மனைத் திருச்சபையை,
உலகமெங்கும் வளர்த்திடுவீர்
பந்தமறப் பரிகரித்தே, பாக்கியமளித் தாண்டருள்வாய்

0 comments:

Post a Comment