Saturday, 12 October 2013

திரியேகா திரியேகா


திரியேகா திரியேகா
திரிலோக இரட்சகா
சர்வ ஜீவாத்துமா
சாற்றுப் பரப் ப்ரம்மா - திரியேகா

ஆதியா அமலா
ஆனந்தக் க்ருபையாலா
அந்த மில்லாதவா
விந்தை துணை தாளா - திரியேகா

அருபே சொரூபா
அஃபா ஒமேகா
அற்புத விமோகா
அருள் செய்யும் விவேகா

அம்பரா நீமூவாள்
அல்லாவே ஒருவா
எம்பரா மெய்தேவா
ஏகனே ஏகோவா - திரியேகா

இயேசு நின் க்ருபைக் கண் பார்
திவ்ய ஸ்நேகத் தன்பால்
மேசைய்யா இயேசைய்யா
ஈசனும் நீரய்யா - திரியேகா

0 comments:

Post a Comment