Saturday, 12 October 2013

கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன்

கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் - எங்கள்
குருவேசுநாதர் பாதங் கும்பிடுகிறேன்

அம்புவி படைத்தவனைக் கும்பிடுகிறேன் - எனை
ஆண்டவனை மீண்டவனைக் கும்பிடுகிறேன்
நம்புமடி யார்க்கருளைக் கும்பிடுகிறேன் - பாவ
நாசனை க்ருபாசனைக் கும்பிடுகிறேன்

தம்பமெனக் கானவனைக் கும்பிடுகிறேன் - நித்திய
சருவ தயாபரனைக் கும்பிடுகிறேன்
உம்பர்தொழும் வஸ்துவையே கும்பிடுகிறேன் - தொனித்
தோசன்னா வோசன்னாவென்று கும்பிடுகிறேன்

நாற்றிசையும் நோக்கி நின்று கும்பிடுகிறேன் - வேத
நாயகனாம் இயேசுவையே கும்பிடுகிறேன்
திருவரு வானவனைக் கும்பிடுகிறேன் - ஒன்றும்
ஒப்பில்லாதக் கர்த்தனையே கும்பிடுகிறேன்

0 comments:

Post a Comment